Thursday, November 17, 2011

குளிரும்....,,!! இருட்டும்....,,!!

எண்ணிலடங்கா நினைவுகளில் _ எது
உன்னுடையதாக இருக்ககக்கூடும்
என்று தேடும் பொழுதுகளில் எல்லாம்
என் தோழனாகவே _ கூட
வலம் வருகின்றது இந்த
குளிரும் ....இருட்டும் .....!!!!!
இரண்டுக்கும் காலமும் இல்லை !!!!
குறிப்பிட்ட நேரமும் இல்லை !!!
அண்ட வெளியில்
ஆயிரம் கோடி உயிர்களுடன் இருந்தாலும்
என்னுள் ஒளிந்து கலந்து கொள்ளும் _ தன்னிகரில்லா
தனிமை போலவே
வாழும் பொழுதுகளில் வலம் வந்து கொண்டிருகின்றது _ இந்த
குளிரும்..... இருட்டும்.....!!!!!
இங்கு உறவுகள் கிடையாது ....,
களவுகள் தெரியாது....,
காவல்கள் புரியாது .....!!!!!
அடர்ந்த காட்டில் படரும் கொடிகள்
போலவே _ என் தனிமை தாண்டவத்தில்
பிணைந்து கொள்கின்றன இந்த
குளிரும்.... இருட்டும்....
எங்கும் எதிலும் நிலைத்து கொள்ளும்
காற்றினை போல _ என் தனிமைகளின்
தேடல்களை பின்தொடர்ந்து
வந்து கொண்டே இருக்கின்றன எப்போதும் _ இந்த
குளிரும் .... இருட்டும்...!!!!!!!

Thursday, January 6, 2011

உலகம் - நிஜந்தன் பார்வையில்

உலகம் தன்னை அதட்ட தெரிந்தவர்களின் ஆணைக்குத்தான் அடி பணிகிறது.அறையத் துணிந்தவர்களிடம் தான் அதிகாரத்தை ஒப்படைக்கிறது.நீ அடிமை என்று முகத்துக்கு நேரே கை நீட்டத் தெரிந்தவர்களுக்குத் தான் சிம்மாசனம் தருகிறது"

-நிஜந்தன்

நன்றி லேகா !!!

Friday, September 11, 2009

வெறுமை

வெளிச்ச‌த்தை விர‌ட்டும்
இருள் எங்கும் சூழ்ந்த‌
கான‌ல்வ‌ழி சாலையில் _ என் வாழ்க்கைச்ச‌க்க‌ர‌ம் ம‌ட்டும்
எப்ப‌டியோ வேக‌மாக
சுழன்று கொண்டுதான் இருக்கிற‌து!!!
த‌ண்ட‌வாள‌ம் இல்லாத‌ ர‌யில்...!!!
கட்டுபாடுக‌ள‌ற்ற‌ ம‌ன‌ம்...!!!
எங்கும் எதிலும் யாவ‌ரும் _ இதுவ‌ரை
வெறும் பிம்ப‌ங்க‌ளாக‌வே ப‌ய‌ணிக்கின்ற‌ன‌ர்!!!
இத்த‌னை வ‌ருட‌ங்க‌ள் க‌ட‌ந்திருப்பினும்_இன்னும்
என்னால் க‌ண்டுகொள்ள‌ முடிய‌வில்லை
என‌க்கே என‌க்கான ஒரு ச‌க‌ ம‌னித‌னை!!!!
ஒரு வேளை...... அவ‌ன்....
உங்க‌ளில் ஒருவ‌னாக‌
கூட‌ ஒளிந்திருக்க‌லாம்..!!!
விடை சொல்லுமா கால‌ம்???


Monday, July 27, 2009

என் இற‌ப்புக்கு முன் !!!

வெளியே தெரியாத வேர்களைப் போல்
சுற்றி கொண்டிருக்கும் எண்ணங்கள்...
கவனங்களில் சிதறி தெறித்து _
என் எதிரே தீ பிழம்புகளாய்
துவண்டு விழுந்த‌ வ‌ண்ண‌ம் இருக்கின்ற‌ன‌...
இறுதியாக‌ என் மூச்சுக‌ள் நிற்கும் முன்பு,
எதையோ எங்கேயோ யாரிட‌மோ
சொல்லிவிட‌ வேண்டும் என்று துடிக்கிற‌து இத‌யம்...
அய்யோ..என் செய்வேன்..
அட‌ங்க‌ துடிக்கும் துடிப்புக்கு வேக‌ம் அதிக‌ம்..
அதையும் மீறி சொல்லிவிட‌ நினைக்கும் ம‌ன‌து..
இர‌ண்டும் போட்டி போட்டுக்கொண்டு..
இதோ என் எதிரில் ச‌ம்ம‌ண‌மிட்டு எக‌த்தாள‌ம் போடுகின்ற‌ன‌...!!!
அத‌ற்கு பின்னால் க‌ருகிய‌ க‌ன‌வுக‌ளும் ..
க‌லைந்து போன‌ க‌ற்ப‌னைக‌ளும் ..
அடிக்கிற காற்றில் கிழிகின்ற‌ ப‌ட்ட‌மாய் _ தாங்கி
நிற்கிற‌து கால‌ம் என்கிற‌ நூல்!!!!
எப்போது அறுந்து விழ‌ப்போகிற‌தோ
ஆவ‌லுட‌ன் பார்க்கும் இத‌ய‌மும்
அதை ஆவேச‌மாய் அட‌க்க முய‌லும் ம‌ன‌மும்...
கால‌ம்
இதோ..இப்போதே...
முடிய‌ போகிற‌தோ....
க‌டைசி வ‌ரை
இவ‌ற்றை நினைத்து நினைத்தே
சொல்ல‌ வ‌ந்த‌தையும் எவ‌ரிட‌மும் இய‌ம்பாம‌ல்...
மெள‌ன‌மாய் என‌க்குள் மெல்ல‌ சூழ்ந்த‌து _சாவு என்னும் இருட்டு....!!!!


Wednesday, March 18, 2009

ரகசியங்கள் - I


என்னுள்ளே எனக்காய் சில மாற்றங்கள்...
மழை வருவதற்க்கு முன்
முளைக்கின்ற‌ இருண்ட மேகங்கள் போல...!!!!
உன் காதல் உணர்வதற்க்கு முன்னரே
சில அதிர்வுகள்......
நினைக்கும் போதெல்லாம்
ஸ்பரிசிக்கும் உணர்வுகள்...
உலகினை சுற்றும் கோள்களை விட‌
வேகமாய் சுழலுகிறது என்னுள்
உந்தன் நினைவுகள்...!!!
நினைவுகளில் எல்லாம் நீயா? இல்லை
நீ மட்டுமே என் நினைவுக‌ளா?
எதுவாக‌ இருப்பினும்
இந்த‌ காத‌ல் வ‌ந்து சேரும் பொழுதினை விட‌
வ‌ரும் முன் நிக‌ழும் க‌ண‌ங்க‌ள்
எல்லாமே மிக‌வும்
எதிர்பார்ப்புக்குள்ளாகின்ற‌ன‌..!!!

Wednesday, January 21, 2009

மௌனம்‌...!!!!


நூலிழை இடைவெளியில்

சந்தடியே இல்லாமல் எனக்குள் மட்டும்

எங்கே எப்படி நுழைந்தது

இந்த பாழாய் போன மௌனம்‌...!!!!

தெரிந்து கொள்ள விடை தேடிக்கொண்டிருக்கிறேன்

நீ

என்னை பெண் பார்க்க வருகிறாய்

என்று சொல்லிய அந்த பொழுதோ?
எல்லோரும் அமர்ந்திருக்க

என் அக்கா அழைத்து வந்த நொடி
நீ
சிரித்த கள்ளமில்லா வெள்ளை மனமாய்

விரிந்த அந்த பொழுதோ?

நாம் இருவரும் நம்முடன் பலரும் கூடி

அளவுடன் பேசிக்கொண்ட‌ கோவில் வளாகத்தில்

சற்று இளைப்பாற அமர்ந்து உடன் எழுந்து கொண்ட

அந்த பொழுதிலா??

இன்னும் நிறைய பொழுதுகள்

நினைவில் நீந்திய வண்ணம் தான் இருக்கிறது...!!!

வந்ததை அனுபவிக்க மனம் இன்றி

எப்படி வந்திருக்கும் என ஆராய்வதிலேயே

நிகழ்கின்ற கணங்கள் நீண்டு கொண்டேயிருக்கிறது‌....!!!

Monday, January 5, 2009

நட்பு....!!!


உன் வருகைக்காக காத்திருந்த‌
ஒவ்வொரு வினாடித்துளிக‌ளும்
ஒவ்வொரு யுக‌ங்க‌ளாய் _ நீ
வ‌ந்த‌பின் நாம் கூடி பேசி ம‌கிழ்ந்த‌
ஒவ்வொரு யுக‌ங்க‌ளும்
ஒவ்வொரு வினாடிக‌ளாய் போன‌து எப்ப‌டி???
மீண்டும் மீண்டும் கேட்டாலும் கிடைக்காத‌
அந்த‌ நாட்க‌ளை தேடி தேடியே _ என் வாழ்க்கை
கரைக்க‌ப்ப‌டும் என்றாலும்
நான் திரும்ப திரும்ப‌ கேட்ப‌து
உன‌க்காக‌ கால்வ‌லிக்க சைக்கிளில் சுற்றிய
அந்த ப‌சுமையான‌ நாட்க‌ள் வேண்டும்...!!!
கார‌ண‌மே இல்லாம‌ல் சிரித்து
போகும் வ‌ழியெல்லாம் சாலைக‌ளில்
வ‌ழிந்திட்ட‌ அந்த‌ ச‌ந்தோஷ க‌ண‌ங்க‌ள் வேண்டும்...!!!
நான் த‌வ‌று செய்தால் _ நீ
உரிமையோடு திட்டிய நாட்க‌ள் வேண்டும்...!!!
வாழ்கின்ற‌ வாழ்க்கை
ஒருநாளே என்று முடிவானால்
உன்னோடு இருக்கும்
இனிமையான‌ ப‌சுமையான‌
அந்த‌ ஒரு நாள் வேண்டும்...!!!
இன்னும் சொல்ல‌ப்போனால்
என் உயிர் உறையும் வ‌ரை
சில நட்புகள் வேண்டும்...
நிலைக்குமா...???