Monday, September 7, 2015

காதலாய்... கசிந்துருகி ... - 1

மழை ஓய்ந்து இருக்கிறது என்று தோன்றுகிறது.இந்த மழை சலிப்பதே இல்லை. முதல் காதல் போல.நினைக்க நினைக்க நனைந்திடும் சுகம் தரும்.திடிரென அழைப்பு மணி ஒலித்தது.என்னடா பண்றே? என் நண்பி தான்.கொஞ்சம் தனியா வாயேன்..உன் கிட்ட பேசனும்.. எதுவும் சொல்லாமல் laptop lock பண்ணிவிட்டு வெளியே வந்தேன்.சாரல் அடித்தது.டேய் அவ ஊரில் இருந்து India வராடா…
மனதில் இருட்டு,மின்னல்…மழை வரும் போல் இருந்தது…வேகமாக துடிக்க ஆரம்பித்தது இதயம்…மனதினுள் மழைக்காலம்.. டேய்ய்ய்…. என்னடா ?
மீண்டும் அதே கேள்வி…விடைதேடும் அவசரம்…தவிப்பை காட்டிக்கொள்ளவில்லை.முடியவும் முடியாது.ஓ ஹோ… உன் கிட்ட சொல்லிட்டாங்களோ எஜமானி .. அதான் என் கிட்ட சொல்றியோ…? என்றேன்.
நீ திருந்தவே மாட்டடா..போ…போய் வெள்ளைக்காரன் கொடுக்கிற மாடுகளை போய் பார்த்துட்டே இரு…அதானே உன் வாழ்க்கை..போ…என்று திட்டி விட்டு வைத்து விட்டாள்.
எங்கள் இருவருக்கும் பொதுவான நண்பி அவள்…அவள் பாடு இன்னும் சிரமம்தான்…அறிவுக்கு புரிகிறது…இருந்தாலும் பாழாய்போன மனசுதான் ஜெயிக்கிறது.12 வருட பரிதவிப்பு…ஒருநாளில் அதை கொட்ட இயலாது. வழியில் கடந்து சென்ற என் Team Member ஏய் சூர்யா,சுனாமி வார்னிங் வந்து இருக்கு..அதனால்..மானேஜர் வீட்டுல இருந்து வேலை பார்க்க போறாராம்..சொல்லிவிட்டு சென்றது ஒரு மின்னல்…!!!
எது எப்படியாக இருந்தாலும் இந்த பெண்களை மட்டும் என்னால் வெறுக்க முடியவில்லை… ஒவ்வொரு பிம்பத்திலும் உன்னை காண்பதிலா..இல்லை..என்னை தவிக்க விட்டுசென்ற உன்னை தேடித்தேடி அலைவதில் உள்ள ஏக்கமா? எதுவென்று தெரியவில்லை…
கடைசியாக உன் தந்தையுடன் உன்னை பார்த்தது.அவர் பார்த்த பார்வையில் அவ்வளவு வெறுப்பு…காலம் முழுவதும் நான் சுமக்கும் அந்த வெறுப்பு…
வார்த்தைகளுக்குள் மாட்டிக்கொண்டு எங்களுக்கு நடுவில் நீ…. என் வாழ்க்கையை விட்டு விலகிய தருணம்… நெருஞ்சி முள்ளாய்….தைக்கிறது..
நினைக்கவே பயமாய் இருந்தது.ஒரு Cigarette எடுத்து பற்றவைத்து கொண்டேன்… நெருப்பாய்….புகையாய்…நீ தான்… நீ மட்டும் தான்…!!!!!சாரல் மழை தூறல் போட்டு….இப்போது பலத்தமழையாகவே படுகிறது..!!!மழை…மழை…மனதினுள் மழை…வெளியே எங்கும் மழை…!!!   எனக்கு மழையென்றால் நீ…. நீயென்றால் மழை…!!!!ஒரு மழைக்கால காலையில் தான்…என் உலகில் நீ முழுவதுமாய் மூழ்கிப்போனாய்…ஒரு மழைக்கால மாலையில் தான்…என்னுள் முழுவதுமாய் உன்னை தொலைத்தேன்…ஒரு மழைக்கால மதியத்தில் தான்…உன் கைகளைப்பற்றி பிடித்துக்கொண்டேன்…அந்த விரல்களை சேர்த்து வைத்த குடையை கூட இன்றுவரை பத்திரபடுத்தி வைத்து இருக்கிறேன்… நன்றிக்கடன்…!!!ஒரு மழைக்கால இரவினில் தான்..கொஞ்சும் நிலா சாட்சியாக… உன்னை கண்களால் பார்த்து… கவிதையாய்…  பற்றிக்கொண்டு…காதலாய் கசிந்துருகி….இதழ் பதித்த தருணங்களிலும் சிரித்து சந்தோஷமாய் துள்ளிக்குதித்து முத்தமிட்ட இதே மழை….!!!!
நிகழ்வுகள் தான் வேறு…இயற்கையோ ஒன்றுதான்…!!!அதுபோல்… என் வாழ்க்கை பயணங்கள் என்பது வேறுவேறு என்றாலும்..என்னுள் உறைந்த இயற்கையாகவே…எப்போதும்…எங்கும் நீ தான் வாழ்கிறாய்…!!! Cigarette கையை சுட்டது…அணைத்துவிட்டு வானத்தை பார்த்தேன்….. இப்போது அழுதுக்கொண்டிருக்கிறது….!!!!

No comments: