Friday, December 12, 2008

மிருக‌ம் நான்...க‌ட‌வுள் நீங்க‌ள்..!!!


எரிகின்ற கொள்ளியில்

கரைகின்ற எண்ணை போல்

சூழ்நிலைக‌ள் என்னுள் எரிந்து

த‌ரையில் உதிரும் சாம்ப‌லாய்

த‌க‌ர்ந்து கொண்டிருக்கிற‌து_என் த‌னிமை!!!

நான் நானும் அல்ல‌... வேறு யாரும் அல்ல‌

நிர்வாண‌மே இங்கு நிர‌ந்த‌ர‌ம்

புரிய‌வில்லை _ அரிதார‌ங்க‌ள்

பூசும் ம‌ன‌ங்க‌ளுக்கு

க‌லைந்த‌ வேஷ‌ங்க‌ளும்

க‌லைந்த‌ பின் அடுத்து ந‌ட‌க்கும் ஒப்ப‌னைக‌ளும்

க‌ண‌ப்பொழுதில் க‌ண்முன்னே

நிக‌ழ்ந்து கொண்டுதான் இருக்கிற‌து...!!!

இவைய‌னைத்தையும் வீறுகொண்டு

விள‌க்க‌மாயுரைக்க‌ _ இய‌ம்ப‌வில்லை

என் நாக்கு..!!!

போனால் போக‌ட்டும்

ம‌ன‌ங்கெட்ட‌ மானுட‌ர்க‌ள்..!!

பாழாய் போன‌ ச‌ட‌ங்குக‌ளும்

ப‌ழ‌கி புளித்த‌ சாஸ்திர‌ங்க‌ளும் _ அணிந்து கொள்ள‌

என்ன தான் ஆசையோ இவ‌ர்க‌ளுக்கு

எடுத்து சொன்னால்

மிருக‌ம் நான்...க‌ட‌வுள் நீங்க‌ள்..!!!

ச‌த்த‌ங்க‌ள் சூழ்ந்து ச‌ச்ச‌ர‌வுக‌ள் மிகுந்து

வெறும் பிண்ட‌ங்க‌ள் ஆளும் நாட்டு வாழ்க்கையின்

க‌ட‌வுளாய் இருப்ப‌தை விட‌_இருள் ம‌ட்டுமே புர‌ளும்

காட்டு வாழ்க்கையில் ஒரு

மிருக‌மாய் அலைவ‌தே மேல்....!!!!!

1 comment:

கிருஷ்ணா...!!!! said...

i feel that slaping in my heart..........so akka im not tat much fluent in english..........