குழந்தை பருவத்தில் கூடிவிளையாடும்
சிறுவர்கள் சொல்லும் பேய்க்கதைகள் கேட்டு..
விடியாத இரவுகள் எப்போது போகும் என அழுது
விடிந்த உடன் _ கொல்லைக்கு செல்ல
துணைக்கு நீ வரவேண்டும்...!!! வருவாயே அப்பா..!!!
பள்ளி நாட்களில் யாரேனும் என்னை அடித்தாலோ
இல்லை நான் யாரையாவது அடித்தாலோ
அந்த இடத்தில் எனக்காக ஆஜானுபாகுவாய்
நீ வேண்டும்...!!! வருவாயே அப்பா...!!!
வகுப்பின் இடைவேளைகளில் வாசலில்
விற்கும் துண்டு மாங்காய்,அவித்த நெல்லிக்காய்
சிவந்த மண் சவ்வு மிட்டாய் வெள்ளரிக்காய் _ வாங்கி
நானும் என் தோழிகளும் கூட்டமாக மகிழ்ந்து
சிரித்து பேசி சாப்பிட _ காசு தருவதற்கு
நீ வேண்டும்...!!! தருவாயே அப்பா...!!!
வருட முடிவில் விடுமுறை நாட்களில்
தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள
"திக்திக்" துடிப்புகளுடன் பயந்து கொண்டே
பள்ளிக்குசெல்லும் பொழுதுகளில் _ எனக்காக
என்முன் வந்து அறிவிக்க நீ வேண்டும் என்று
நினைத்த வேளைகளில் நிஜமாகவே வருவாயே ... அப்பா..!!!
கல்லூரிக்கு போகிறாய்_கையில்
காசு நிறைய இருக்கட்டும்
என்று நான் எதிர்பாராத தருணங்களில்
என்னை திகைப்பில் ஆழ்த்த
நீ வேண்டும் _ செய்தாயே அப்பா...!!!
நான் கைவீசி சாலைகளில்
நடந்ததை விட
உன் கைப்பிடித்தே நடந்தது அதிகம்...!!!
இப்படி
நீ எனக்கு கொடுத்த பாசங்களையும்
நீ உரைத்த சந்தோஷங்களையும்
உனக்கு பிடித்த கல்வியையும் கொண்டு
உலகை ஜெயிப்பேன் _ உன் காலடியில் வைக்க என்று
உன்னை பிரிந்த நாள் முதலாய்...
நீயே என் அறிவாகவும்
நீயே என் ஆற்றலாகவும்
நீயே என் குருவாகவும் _ கொண்டு
இன்று நீ நினைத்த எண்ணங்களையெல்லாம்
செயலாக்கி உன்னை தேடி வருகிறேனே ...அப்பா...!!!
எங்கே போனாய் நீ????
"இறப்பு என்பது இழப்பு அல்ல..!!!
நீ கொண்ட மனத்தினால் _ நித்தம்
ஒருவரை அன்பினால் பாராட்டும்
மனிதருக்கு இறப்பு என்பது இல்லை...
அதனால்
இழப்பு என்பதும் இல்லை" _ இது
நீ எனக்கு சொன்ன மேற்க்கோள்...!!!
ஆனாலும் இதில் உன்னை வைத்து
பார்க்க ஏனோ மனம் சிக்கி..
சிதறி சிதைந்து போகிறது...!!!
எங்கு மறைந்து போனாய்...?
ஏன் இறந்து போனாய்...???
உன் பிம்பமாய் நான் மட்டும்
அலைகிறேன் _ உன் மகளாய்...!!!!
6 comments:
உருக்கமான கவிதை....
அப்பா பற்றி அப்பா மீதான் அன்பு பற்றிய உருக்கமான கவிதையாக வடிவம்கொண்டு வந்து சேர்த்தது உங்களின் உள்ளம்!
//இறப்பு என்பது இழப்பு அல்ல..!!!
நீ கொண்ட மனத்தினால் _ நித்தம்
ஒருவரை அன்பினால் பாராட்டும்
மனிதருக்கு இறப்பு என்பது இல்லை...
அதனால்
இழப்பு என்பதும் இல்லை" _ இது
நீ எனக்கு சொன்ன மேற்க்கோள்...!!!///
அப்பா -
மனதால் தினமும் அன்பினில் நனைத்திருந்திருங்கள்
தினமும் அன்பாய் நினைத்திருங்கள்!
After a long time am reading these kind of Tamil words through your blog.. I could still remember how we read "siruvarmalar", "kumudham"..etc, but, today we do not have time for those. Even after our generation i feel, we might forget tamil. But thanks to your words.. Keep writing.. feeling light in heart when reading few words from the mother tongue.
And great words in this particular post, it really affected me..
sundar
very nice rumpa rumpa nalla erukku
akka....
after reading this., i don know how to react for this.........in simple i don know how to comment, i think i don havetha much qualification to comment this..........NAVANEEDAN
Very touching poem...
Post a Comment