Wednesday, December 24, 2008

க‌ன‌வுக‌ள் விற்ப‌னைக்கு...!!!


கண்களை மூடி கனவினை தேடும்
முகங்களுக்கிடையே
என் மனதினை திற‌ந்து யுக‌ங்க‌ளை
காண‌ விழையும் இந்த‌
க‌ன‌வுக‌ள் விற்ப‌னைக்கு...!!!
யார் வேண்டுமானாலும் வ‌ர‌லாம்
எது வேண்டுமானாலும் வ‌ர‌லாம்..
விதி வில‌க்குக‌ள் இல்லை
ம‌ன‌க்குதிரை ஓடும் வ‌ரை ஆட்ட‌ம்..!!!
எல்லைக‌ளுக்கு அப்பாற்ப்ப‌ட்ட‌
க‌ன‌வுக‌ள் விற்ப‌னைக்கு...!!!
நான் யாரோவாக‌...யாரோ நானாக‌
மாற்றி போடும் கால‌ங்க‌ள்..மீண்டும் _ அந்த‌
யாரோ இன்னொருவ‌ராக‌.. அவர்க‌ளின்
எல்லைக்குள் நானாகி திளைக்கின்ற‌ கண்ணாமூச்சி
க‌ன‌வுக‌ள் விற்ப‌னைக்கு...!!!
சில‌ க‌ன‌வுக‌ள் திரைக‌ளில் இருந்து க‌ள‌வாட‌ப்ப‌ட்டு
நான் க‌ண்ட‌ சில‌வ‌ற்றைக‌ள் திரைக‌ளுக்குள்ளே
க‌ள‌வாய் போய் பிற‌கு காணாம‌லே க‌லைகின்ற‌
க‌ன‌வுக‌ள் விற்ப‌னைக்கு...!!!
இதை ப‌டிக்கும் இந்த‌ நொடி உங்களுக்குள்
உதிக்கும் ஏதோ அர்த்த‌ம‌ற்ற‌ க‌ன‌வுக‌ளும்
ஆர்ப்ப‌ரிக்கும் நினைவுக‌ளும் விற்ப‌னைக்கே உரித்தாகுகிற‌து!!!
எடுத்து கொண்டாடும் உரிமையாள‌ர்
உங்க‌ளில் யாரோ ஒருவ‌ராய் இருக்கலாம்...
இல்லை ஏதும் இல்லாத‌தாய் இருக்க‌லாம்...!!!

4 comments:

KARTHIK said...

// இதை ப‌டிக்கும் இந்த‌ நொடி உங்களுக்குள்
உதிக்கும் ஏதோ அர்த்த‌ம‌ற்ற‌ க‌ன‌வுக‌ளும்
ஆர்ப்ப‌ரிக்கும் நினைவுக‌ளும் விற்ப‌னைக்கே உரித்தாகுகிற‌து!!!//

படித்தேன் ரசித்தேன்

சரவண வடிவேல்.வே said...

நல்ல கவிதை...

என் கனவுகள் அது என்னுடைய சாம்ராஜ்யம்... அதில் கண்டிப்பாக மற்றவர்களுக்கு அனுமதி இல்லை..

என் கனவுகள் கண்டிப்பாக விற்பனைக்கு அல்ல...

Shakthee said...

விற்பனைக்கு இல்லை என்றாலும்
கண்டிப்பாக உரிமையாளர் உண்டு என்பதை
மறுப்பதற்கில்லை என எண்ணுகிறேன் தோழரே!!!

கிருஷ்ணா...!!!! said...

...................!!!!!!!!!!!!!