வெளிச்சத்தை விரட்டும்
இருள் எங்கும் சூழ்ந்த
கானல்வழி சாலையில் _ என் வாழ்க்கைச்சக்கரம் மட்டும்
எப்படியோ வேகமாக
சுழன்று கொண்டுதான் இருக்கிறது!!!
தண்டவாளம் இல்லாத ரயில்...!!!
கட்டுபாடுகளற்ற மனம்...!!!
எங்கும் எதிலும் யாவரும் _ இதுவரை
வெறும் பிம்பங்களாகவே பயணிக்கின்றனர்!!!
இத்தனை வருடங்கள் கடந்திருப்பினும்_இன்னும்
என்னால் கண்டுகொள்ள முடியவில்லை
எனக்கே எனக்கான ஒரு சக மனிதனை!!!!
ஒரு வேளை...... அவன்....
உங்களில் ஒருவனாக
கூட ஒளிந்திருக்கலாம்..!!!
விடை சொல்லுமா காலம்???
3 comments:
வழக்கம்போல இதுலையும் வெறுமைதானா.
:-) :-) :-)
//எங்கும் எதிலும் யாவரும் _ இதுவரை
வெறும் பிம்பங்களாகவே பயணிக்கின்றனர்!!!//
//என்னால் கண்டுகொள்ள முடியவில்லை
எனக்கே எனக்கான ஒரு சக மனிதனை!!!!//
ஆச்சர்யம்தான் !
காலம் வழி காண்பிக்கும் தொடருங்கள் பயணத்தினை....!
Post a Comment