Thursday, February 21, 2008

நாகரீகம்

படர்ந்து செல்லும் இருட்டில்
பாய்ந்து ஓடும் ‍_ வெளிச்சங்கள் படர‌
அரவமற்ற சாலையில் வாகனங்களை தவிர‌
வேறெதுவும் காணமுடியவில்லை!

வீட்டிற்கு செல்லும் பாதையில்
ஒரு மயான காடும் இருக்கின்றது
காற்றை படித்தவாறு _ கண்ணிமைக்கும்
நேரங்களில் அதை கடக்கும் வேளைகளில்
நானும் நினைத்திருக்கிறேன் _ ஒருநாள்
என் இடம் இதுவாக கூடும் என்று!

தூரத்தில் ஒலிக்கும் தேவாலய மணியோசை
என்னை யோசிக்க வைதிருக்கிறது _ ஒருவேளை
எல்லோரும் கடவுள் தானோ ..!

அட‌ர்ந்த‌ காட்டின் மேல்
உறைந்த‌ க‌ருமையில் _ ப‌ர‌வும்
வெயில் போல‌...
இந்த‌ நாக‌ரீக‌ வாழ்கை
என் நிஜ‌ங்க‌ளை க‌ளைந்து
நிழ‌ல்க‌ளை ம‌ட்டுமே உல‌வ‌ விட்டிருக்கிற‌து!

போலி புன்ன‌கைக‌ள்
புற‌ங்கூறுத‌ல்...
ம‌றைமுக‌ தாக்குத‌ல்க‌ளில் _ மிருக‌ங்க‌ளே
ந‌ம்மை க‌ண்டு மிர‌ளும் நிலை இந்த நாகரீகம்...!

யாருக்கு வேண்டும்?
எத‌ற்கு வேண்டும்?
ஏன் வேண்டும்?

உண‌ர்வுக‌ள் விழித்து கொள்ள‌
சிற‌குக‌ள் முளைத்து பறந்து போகின்றேன்_ மீண்டும்
ந‌ம் க‌ற்கால‌ வாழ்கைக்கே...!!!

2 comments:

Meenal Selvaraj said...

First few lines of this post are the ones comes to my mind when I drive car. This culture came to us when we started using Cell phones than talking to the people near you

JAGANNATHAN CS said...

நாகரீகம் என்னும் போர்வையில் நாம் செய்யும் பகல் வேஷ செயல்களை அழகாக கூறியுள்ளீர்

என்றும் அன்புடன்
ஜெகன் சுசி
jaganchitra.blogspot.com