வெளிச்சத்தை விரட்டும்
இருள் எங்கும் சூழ்ந்த
கானல்வழி சாலையில் _ என் வாழ்க்கைச்சக்கரம் மட்டும்
எப்படியோ வேகமாக
சுழன்று கொண்டுதான் இருக்கிறது!!!
தண்டவாளம் இல்லாத ரயில்...!!!
கட்டுபாடுகளற்ற மனம்...!!!
எங்கும் எதிலும் யாவரும் _ இதுவரை
வெறும் பிம்பங்களாகவே பயணிக்கின்றனர்!!!
இத்தனை வருடங்கள் கடந்திருப்பினும்_இன்னும்
என்னால் கண்டுகொள்ள முடியவில்லை
எனக்கே எனக்கான ஒரு சக மனிதனை!!!!
ஒரு வேளை...... அவன்....
உங்களில் ஒருவனாக
கூட ஒளிந்திருக்கலாம்..!!!
விடை சொல்லுமா காலம்???
Friday, September 11, 2009
Monday, July 27, 2009
என் இறப்புக்கு முன் !!!
வெளியே தெரியாத வேர்களைப் போல்
சுற்றி கொண்டிருக்கும் எண்ணங்கள்...
கவனங்களில் சிதறி தெறித்து _
என் எதிரே தீ பிழம்புகளாய்
துவண்டு விழுந்த வண்ணம் இருக்கின்றன...
இறுதியாக என் மூச்சுகள் நிற்கும் முன்பு,
எதையோ எங்கேயோ யாரிடமோ
சொல்லிவிட வேண்டும் என்று துடிக்கிறது இதயம்...
அய்யோ..என் செய்வேன்..
அடங்க துடிக்கும் துடிப்புக்கு வேகம் அதிகம்..
அதையும் மீறி சொல்லிவிட நினைக்கும் மனது..
இரண்டும் போட்டி போட்டுக்கொண்டு..
இதோ என் எதிரில் சம்மணமிட்டு எகத்தாளம் போடுகின்றன...!!!
அதற்கு பின்னால் கருகிய கனவுகளும் ..
கலைந்து போன கற்பனைகளும் ..
அடிக்கிற காற்றில் கிழிகின்ற பட்டமாய் _ தாங்கி
நிற்கிறது காலம் என்கிற நூல்!!!!
எப்போது அறுந்து விழப்போகிறதோ
ஆவலுடன் பார்க்கும் இதயமும்
அதை ஆவேசமாய் அடக்க முயலும் மனமும்...
காலம்
இதோ..இப்போதே...
முடிய போகிறதோ....
கடைசி வரை
இவற்றை நினைத்து நினைத்தே
சொல்ல வந்ததையும் எவரிடமும் இயம்பாமல்...
மெளனமாய் எனக்குள் மெல்ல சூழ்ந்தது _சாவு என்னும் இருட்டு....!!!!
சுற்றி கொண்டிருக்கும் எண்ணங்கள்...
கவனங்களில் சிதறி தெறித்து _
என் எதிரே தீ பிழம்புகளாய்
துவண்டு விழுந்த வண்ணம் இருக்கின்றன...
இறுதியாக என் மூச்சுகள் நிற்கும் முன்பு,
எதையோ எங்கேயோ யாரிடமோ
சொல்லிவிட வேண்டும் என்று துடிக்கிறது இதயம்...
அய்யோ..என் செய்வேன்..
அடங்க துடிக்கும் துடிப்புக்கு வேகம் அதிகம்..
அதையும் மீறி சொல்லிவிட நினைக்கும் மனது..
இரண்டும் போட்டி போட்டுக்கொண்டு..
இதோ என் எதிரில் சம்மணமிட்டு எகத்தாளம் போடுகின்றன...!!!
அதற்கு பின்னால் கருகிய கனவுகளும் ..
கலைந்து போன கற்பனைகளும் ..
அடிக்கிற காற்றில் கிழிகின்ற பட்டமாய் _ தாங்கி
நிற்கிறது காலம் என்கிற நூல்!!!!
எப்போது அறுந்து விழப்போகிறதோ
ஆவலுடன் பார்க்கும் இதயமும்
அதை ஆவேசமாய் அடக்க முயலும் மனமும்...
காலம்
இதோ..இப்போதே...
முடிய போகிறதோ....
கடைசி வரை
இவற்றை நினைத்து நினைத்தே
சொல்ல வந்ததையும் எவரிடமும் இயம்பாமல்...
மெளனமாய் எனக்குள் மெல்ல சூழ்ந்தது _சாவு என்னும் இருட்டு....!!!!
Wednesday, March 18, 2009
ரகசியங்கள் - I
என்னுள்ளே எனக்காய் சில மாற்றங்கள்...
மழை வருவதற்க்கு முன்
முளைக்கின்ற இருண்ட மேகங்கள் போல...!!!!
உன் காதல் உணர்வதற்க்கு முன்னரே
சில அதிர்வுகள்......
நினைக்கும் போதெல்லாம்
ஸ்பரிசிக்கும் உணர்வுகள்...
உலகினை சுற்றும் கோள்களை விட
வேகமாய் சுழலுகிறது என்னுள்
உந்தன் நினைவுகள்...!!!
நினைவுகளில் எல்லாம் நீயா? இல்லை
நீ மட்டுமே என் நினைவுகளா?
எதுவாக இருப்பினும்
இந்த காதல் வந்து சேரும் பொழுதினை விட
வரும் முன் நிகழும் கணங்கள்
எல்லாமே மிகவும்
எதிர்பார்ப்புக்குள்ளாகின்றன..!!!
Monday, January 5, 2009
நட்பு....!!!
உன் வருகைக்காக காத்திருந்த
ஒவ்வொரு வினாடித்துளிகளும்
ஒவ்வொரு யுகங்களாய் _ நீ
வந்தபின் நாம் கூடி பேசி மகிழ்ந்த
ஒவ்வொரு யுகங்களும்
ஒவ்வொரு வினாடிகளாய் போனது எப்படி???
மீண்டும் மீண்டும் கேட்டாலும் கிடைக்காத
அந்த நாட்களை தேடி தேடியே _ என் வாழ்க்கை
கரைக்கப்படும் என்றாலும்
நான் திரும்ப திரும்ப கேட்பது
உனக்காக கால்வலிக்க சைக்கிளில் சுற்றிய
அந்த பசுமையான நாட்கள் வேண்டும்...!!!
காரணமே இல்லாமல் சிரித்து
போகும் வழியெல்லாம் சாலைகளில்
வழிந்திட்ட அந்த சந்தோஷ கணங்கள் வேண்டும்...!!!
நான் தவறு செய்தால் _ நீ
உரிமையோடு திட்டிய நாட்கள் வேண்டும்...!!!
வாழ்கின்ற வாழ்க்கை
ஒருநாளே என்று முடிவானால்
உன்னோடு இருக்கும்
இனிமையான பசுமையான
அந்த ஒரு நாள் வேண்டும்...!!!
இன்னும் சொல்லப்போனால்
என் உயிர் உறையும் வரை
சில நட்புகள் வேண்டும்...
நிலைக்குமா...???
Subscribe to:
Posts (Atom)