வாகனங்கள் வேகமாக கடக்கின்ற சாலையிலே
ஓங்கி உயரமாய் வளர்ந்திருக்கின்ற மரங்கள்...
நம் பிரிவிற்கு சாட்சியாய் மெளனி சாய்கின்றன...!!
எப்போதும் இருப்பேன் உன்னுடன் என்று
எதிர்ப்பது யாராக இருந்தாலும் தவிர்த்து _ உன்னை
தாங்க வரும் வேளையில்
எங்கே(கோ) போனாயே நீ!!!
இழந்ததெல்லாம் போதும்
இனி என்ன மிஞ்சியிருக்கிறது
எஞ்சி கிடக்கின்ற எச்சில் வாழ்க்கையில்_
எங்கோ எதற்காகவோ எப்பொழுதோ
எனக்கு கிடைத்த _ உன் நினைவுகளே
சுவடுகளாய் படர்ந்து நீ...ண்டு வருகிறது...!!!
நீ இல்லாத என் நிகழ்காலம்!!!
1 comment:
நன்றாக உள்ளது. எல்லா கவிதைகளிலும் ஒரு சோகம் தெரிகிறதே???...
வெற்றி அடைந்த காதல்களுக்கு ஒரு கவிதை எழுதலாமே...
Post a Comment