இரவுகள் ரகசியமானவை....
வேடங்கள் பல அணியும் _ வேதனை
முகமூடி வாழ்க்கையில்
வெளிப்படையான
போதை போல் என்னை
விரும்ப வைக்கும் இந்த கார்கால
நீண்...ட இரவுகள்
என்றும் மிக ரகசியமானவை !!!
தவளைகளின் ரீங்காரம்
மழைத்துளியின் சலசலப்பு
ஜன்னலை விரிக்கையில்
உள்ளமும் உறைய வைக்கும்
இந்த காற்று...
குளிர்கால இரவுகளுக்காகவே
பகலெல்லாம் எதிர்பார்த்து
காத்திருக்க வைக்கும்
என் தனியான இரவுகள்
என்றும் ரகசியமானவை!!!
சிலிர்க்க வைக்கும்
நினைவுகளுடனும்
வரப்போகும் நிகழ்வுகளுக்கான
கனவுகளுடனும்...
எல்லையில்லா பிரபஞ்சத்தில்
நான் மட்டும் ஒருத்தியாய்
மகிழ்வுடன் ஆர்பரித்து அலற
வைக்கும் _ இந்த
இரவுகள் என்றும் ரகசியமானவை!!!
என் சுயநலத்தின் பெருவாரியான
வெளிப்பாடுகளில் இருந்து வீறு கொண்டு
அடைக்கப்பட்ட வில்லில்
ஆவேசமாய் கிளம்பும்
அம்புகள் போல்
வெளியேற
காத்திருக்கும்
தவிப்புகள் மிகுந்த _ இந்த
நீண்...ட இரவுகள்
என்னுள் என்றுமே
மிக மிக ரகசியமானவை...!!!!
3 comments:
அருமையான கவிதை....... தனிமையும் இரவுகளும் இருக்கும் வரை ரகசியங்களுக்கு பஞ்சம் இருக்காது...... :-)
உண்மை தான் சரவணா...
தனிமையும்,இரவுகளும் இருக்கும் வரை ரகசியங்களுக்கு குறைவிருக்காது...!!!
பாசாங்கற்ற வார்த்தைகள்... அதுதான் உண்மை கவிதையின் மேன்மை.. அது உங்களுக்கு கை வருகின்றது....
Post a Comment