வெளியே தெரியா கண்ணிவெடியில்
கால் பதித்திருக்கும் அவஸ்தை
போல் எப்போதும் வாழ்கிறது - உன் நினைவுகள்
எல்லோரிடமும் பேசும் போதும் - அதன்
குறுக்கீடுகள் முன்பை விட அதிகரித்து விட்டன !
என் ரகசிய செய்கைகளிலும்
கோப்பையில் வழியும் கருந்திரவத்தின் கசந்த போதைகளிலும்
என்னை முழுகக நனைத்து
என் சுயநினைவுகளை - உறிஞ்சி கொள்கிறது.
என் அந்தரங்க அறையில் வடிகட்டாத காற்றாக
வலுக்கட்டாயமாக உள்ளே நுழைந்து விடுகிறது!
நள்ளிரவில் - சிலிர்ப்புகள் பூத்து
என்னுடலில் வெறியாட்டம் போடும் அதை
ஒரு வெற்றிடத்தில் வெறியோடு அழுத்தி விட்டு
உறங்குகிறேன் -மறுநாள் காலையில்
என் கனவுகள் எனும் வரவேற்பறையில்
சம்மணமிட்டு அமர்ந்திருக்கிறது
தொலைத்து விட்டு வந்த - உன் நினைவுகள்
1 comment:
நினைவுகளின் சக்தியை இதைவிட அழ்காகா இன்னும் கூறமுடியாது...!!!
கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க....
Post a Comment