மழை காலங்களில்
இரவு நேரங்களில் விட்டு விட்டு போகும்
மின்சாரம் போல
வாழ்க்கையும் சில சமயங்களில்
பிடிக்காமலே கழிகிறது...!!!
இருளே வாழ்க்கையாகவும்
வாழ்க்கையே இருளாகவும்
வாழும் எனக்கு _ இந்த தனிமை
ஒரு வரப்பிரசாதமாகவே இருந்திருக்கிறது..!!
கலந்து போகும் மனிதர்களும்
கலைந்து போகும் மனங்களும்
நிறைந்து எங்கும் பிம்பங்களே
சூழ்ந்த இந்த மனிதர்கள் வாழும்
மயானத்தின் கொள்ளியாக
ஒளிரும் _ இந்த தனிமை
என் விடுதலையாகவே இருந்திருக்கிறது!!!
வெறுமையின் இடங்களை நிரப்பவும்
அலை போல் சூழும் மனிதர்களிடையே
சிறு படகு போல் தனியே என்னை
பயணிக்க வைக்கும் __ இந்த தனிமை
என்றும் என் விருப்பமாகவே இருந்திருக்கிறது..!!!
தனிமையே இனிமையாகவும்
இனிமையே தனிமையாகவும்
தாகங்கள் நிரம்பிய இவ்வேட்கை
உலகினில் தீரா நதி போல்
என்னை சுற்றி வளைக்கும் __ இந்த தனிமையே
இன்று என் துணையாகவும் விரிந்திருக்கிறது...!!!!
4 comments:
கவிதைக்கும் தனிமைக்கும் என்னதான் உறவோ.? கவிஞர்கள் என்றாலே, தனிமை மீது தீராத காதல் வந்துவிடும் போல.
மழைக்காலங்களில் விட்டு விட்டுப் போகும் மின்சாரமும், மனிதர்கள் வாழும் மயானத்தின் கொள்ளியும், அற்புதம்..
Wow ! Wonderful tribute to loneliness. I like it.
தனிமை ரொம்ப பிடிக்குமோ..............?
தனிமை மட்டுமே பிடிக்கும் ...!!!
Post a Comment