"இப்ப என்ன நடந்து போச்சுன்னு எல்லாரும் வேடிக்கை பார்கறீங்க ?" அவள் கத்திய கத்தலில் தெரு சனம் கூடி இன்னும் சற்று உற்று பார்த்தது ...!!!
ஒரு கருப்பு ஜீன்ஸ் டி - ஷர்ட் இறுக்கி போட்ட ஒற்றை குதிரை வால்.கோபத்தில் தலை ஆடும் போது ஆடுகிறது ..!
அந்த சாலையில் தார் போட்டிருந்தார்கள் ,ஒரு குறுக்கு பாதையில் தெரியாமல் வண்டியை நுழைத்து விட்டாள்.கூட அவள் தங்கை வேறு தன் கூர் செருப்பால் (ஹீல்ஸ்) தடம் பதித்து விட்டாள் ...
அந்த பெண்ணிற்கு மூச்சு வாங்கியது.. கோபத்தில் முகம் சிவந்து குரல் நடுங்கியது !!
"அதான் தெரியாம வந்தாச்சு ...தப்புன்னு தெரிஞ்சுடுச்சு ..இப்ப வண்டிய திருப்பி கிட்டு தானே இருக்கேன்..இப்ப என்னத்துக்கு எல்லாரும் மாஞ்சு மாஞ்சு பார்த்து கிட்டு இருக்கீங்க... ??"
அந்த தெரு அக்ரகாரம் போல இருந்தது..முடிவில் ஒரு சேரியும் ஒட்டி கொண்டிருந்தது.முனையில் இரு நாய்கள் சாக்கடையில் விழுந்து புரள .. ஒரு குழந்தை பிஸ்கட்டைமண்ணில் போட்டு,பிறகு அதை வாயில் போட்டு சப்பி கொண்டுபாவம் முடி நிறைய வேண்டுதலாக இருக்க கூடும்,தெரிய வில்லை ..அதுவும் இவர்கள் போட்ட சத்தத்தில் கை கொட்டி சிறிது கொண்டிருந்தது...
ஒரு வழியாக யார் உதவியும் இல்லாமல் வண்டியை திருப்பி விட்டாள் ..!!
தங்கையை பார்த்து வண்டியில் ஏறுமாறு கூச்சலிட்டாள்..
கூட்டம் அவள் திருப்பி விட்டாலே என்று வருத்தத்துடன் களைய ஆரம்பித்தது..
என்ன மனுஷங்க இவங்க ? ஏன் இந்த விஷயத்துல மட்டும் இருக்குற ஆத்திரம் குரோதம் வேற எந்த விஷயத்துலயும் இல்ல .. ஒரு வேலை அந்த அம்மாவின் மகனோ மருமகனோ அந்த பாதையில் ஒட்டி இருந்தால் சும்மா இருந்து இருப்பாரோ ....??
ஏன் இந்த ஊரில் எல்லாரும் இப்படி இருக்காங்க...? காய்கறி வாங்கும் விஷயத்தில் தொடங்கும் இந்த ஏமாற்று வியாபாரம் எல்லா இடத்திலும் புகுந்து விளையாடுகிறது ...
வசதிக்கு ஏற்றார் போல் செய்கையில் மாறுபாடு இருந்தாலும் சேயுஉம் நோக்கம் அனைவருக்கும் ஒன்றாகவே இருக்கிறது ..ஏன் இப்படி சக மனித தர்மம் என்பது என்ன? கிடையாதோ? இல்லை இவர்களுக்கு தெரியாதோ ? என் ஊரில் உள்ள மனிதர்களை வந்து இந்த நகரத்தில் இறக்கி விட்டு இவர்களை எல்லாம் துரத்தினால் என்ன ஆகும் ?" என்று அவள் தங்கையிடம் கோபமாக உரக்க பேசிகொண்டே இதோ என் வடிக்கு முன்னால் தான் செல்கிறாள்...
இவள் யார்... என் மனம் எனதுள் கேள்விகளை தொடுக்க ஆரம்பித்தது ...சிலரை பார்த்தால் வித்தியாசமாக இருக்கும் ..சிலருடம் பழகினால் வித்தியாசமாக இருக்கும் .. இதோ இவள் போகிற திசையில் இருந்து வரும் தென்றல் கூட எனக்கு வித்யாசமாகவே பட்டது ...
மனசுக்குள் ஒரு உற்சாகம் தொற்றி கொள்ள அவள் போகும் பாதை பார்த்து என் மனதும் வண்டியும் ... புலம்பி கொண்டே செல்லும் அவளை என்னால் கவனிக்காமல் இருக்க முடியவில்லை ..
சிரிப்பு வந்தது ... என்னடா மடையா உனக்கு எவ்வளவோ வேலை இருக்க புயல் போல் செல்லும் இவளைப்போய் பின்தொடர்வது ஏனோ என்று மனம் நினைக்க அவளயே அவள் பேசுவதையே கேட்க வேண்டும் என்ற உந்துதலில் என்னை பின்தொடர்ந்த ஆட்டோ முட்டியதில் அவர்களுக்கு அருகில் "கிரீச்" என்ற சத்தத்துடன் பிரேக் போட்டு கால்கள் தார் சாலையில் சிரைக்க விழுந்து தொலைத்தேன் ...
அவள் தன் வண்டியை தங்கையிடம் பிடித்து கொள்ள சொல்லி விட்டு வேகமாய் ஓடி வருகிறாள் .. நிழல் போல் தெரிகிறது ... ஐயோ கண்கள் இருட்டுகின்றதே ..
ஐயோ ... என்ற என் உயிரின் ஓலஙகளில் உறைந்து போனேன்...
(தொடரும்)
1 comment:
அருமையான ஆரம்பம்.. தொடர்ந்து இதை எழுதுங்கள்...
Post a Comment