வெளியே தெரியாத வேர்களைப் போல்
சுற்றி கொண்டிருக்கும் எண்ணங்கள்...
கவனங்களில் சிதறி தெறித்து _
என் எதிரே தீ பிழம்புகளாய்
துவண்டு விழுந்த வண்ணம் இருக்கின்றன...
இறுதியாக என் மூச்சுகள் நிற்கும் முன்பு,
எதையோ எங்கேயோ யாரிடமோ
சொல்லிவிட வேண்டும் என்று துடிக்கிறது இதயம்...
அய்யோ..என் செய்வேன்..
அடங்க துடிக்கும் துடிப்புக்கு வேகம் அதிகம்..
அதையும் மீறி சொல்லிவிட நினைக்கும் மனது..
இரண்டும் போட்டி போட்டுக்கொண்டு..
இதோ என் எதிரில் சம்மணமிட்டு எகத்தாளம் போடுகின்றன...!!!
அதற்கு பின்னால் கருகிய கனவுகளும் ..
கலைந்து போன கற்பனைகளும் ..
அடிக்கிற காற்றில் கிழிகின்ற பட்டமாய் _ தாங்கி
நிற்கிறது காலம் என்கிற நூல்!!!!
எப்போது அறுந்து விழப்போகிறதோ
ஆவலுடன் பார்க்கும் இதயமும்
அதை ஆவேசமாய் அடக்க முயலும் மனமும்...
காலம்
இதோ..இப்போதே...
முடிய போகிறதோ....
கடைசி வரை
இவற்றை நினைத்து நினைத்தே
சொல்ல வந்ததையும் எவரிடமும் இயம்பாமல்...
மெளனமாய் எனக்குள் மெல்ல சூழ்ந்தது _சாவு என்னும் இருட்டு....!!!!