உன் வருகைக்காக காத்திருந்த
ஒவ்வொரு வினாடித்துளிகளும்
ஒவ்வொரு யுகங்களாய் _ நீ
வந்தபின் நாம் கூடி பேசி மகிழ்ந்த
ஒவ்வொரு யுகங்களும்
ஒவ்வொரு வினாடிகளாய் போனது எப்படி???
மீண்டும் மீண்டும் கேட்டாலும் கிடைக்காத
அந்த நாட்களை தேடி தேடியே _ என் வாழ்க்கை
கரைக்கப்படும் என்றாலும்
நான் திரும்ப திரும்ப கேட்பது
உனக்காக கால்வலிக்க சைக்கிளில் சுற்றிய
அந்த பசுமையான நாட்கள் வேண்டும்...!!!
காரணமே இல்லாமல் சிரித்து
போகும் வழியெல்லாம் சாலைகளில்
வழிந்திட்ட அந்த சந்தோஷ கணங்கள் வேண்டும்...!!!
நான் தவறு செய்தால் _ நீ
உரிமையோடு திட்டிய நாட்கள் வேண்டும்...!!!
வாழ்கின்ற வாழ்க்கை
ஒருநாளே என்று முடிவானால்
உன்னோடு இருக்கும்
இனிமையான பசுமையான
அந்த ஒரு நாள் வேண்டும்...!!!
இன்னும் சொல்லப்போனால்
என் உயிர் உறையும் வரை
சில நட்புகள் வேண்டும்...
நிலைக்குமா...???